முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பற்றி எரியும் மத்திய கிழக்கு : இரத்தானது அமெரிக்கா – ஈரானின் முக்கிய ஒப்பந்தம்

அமெரிக்கா (United States) – ஈரான் (Iran) இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை கடும் தாக்குதல் நடத்தியது.

ஈரான்  – இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேலின் 200 போர் விமானங்கள், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின. அதேபோல் மாலையிலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 

பற்றி எரியும் மத்திய கிழக்கு : இரத்தானது அமெரிக்கா - ஈரானின் முக்கிய ஒப்பந்தம் | Us Irans Next Round Of Nuclear Talks Called Off

இந்த தாக்குதல்களில் 9 அணு விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது.

இதில் இஸ்ரேலின் ராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்கின. நேற்றும் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. இதற்கிடையே தங்களது தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேலும், ஈரானும் அறிவித்தன.

இந்த நிலையில் 3-வது நாளாக இன்று இஸ்ரேல், ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை தொடுத்தன.

அமெரிக்கா – ஈரான் 

மேலும், கடந்த சில நாள்களாக, ‘ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு’ என்ற பேச்சு அடிபட்டு வந்தது. இதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.

பற்றி எரியும் மத்திய கிழக்கு : இரத்தானது அமெரிக்கா - ஈரானின் முக்கிய ஒப்பந்தம் | Us Irans Next Round Of Nuclear Talks Called Off

இந்த நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்த பேச்சுவார்த்தை இன்று ஓமனில் நடைபெற இருந்த நிலையில் அதில் பங்கேற்க ஈரான் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதேவேளை இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்து நிறுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/86mQJL4qmIk

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.