முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈரானில் ஆட்சி அமைக்க வியூகம் வகுக்கும் இஸ்ரேல்: பாதாள அறையில் பதுங்கிய முக்கிய புள்ளி

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்று விட்டு ஈரானில் புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இஸ்ரேல் வியூகம் வகுத்து வருவதாக போரியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த நான்கு நாட்களாக தொடரும் ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமான உலக நாடுகள் அச்சத்தை எதிர் நோக்கியுள்ளனர். 

ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஜூன் 13 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ இலக்குகளை குறி வைத்து தாக்குதல் மேற்கொண்டது.

பாதாள அறையில் அலி கமேனி

அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களுக்கு நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதிலளித்தது ஈரான்.

ஈரானில் ஆட்சி அமைக்க வியூகம் வகுக்கும் இஸ்ரேல்: பாதாள அறையில் பதுங்கிய முக்கிய புள்ளி | Leader Ayatollah Khamenei Hiding Underground

இந்த நிலையில் நேற்றைய தினம் (16.06.2025) ஈரானின் அரச தொலைக்காட்சி மீதும் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது.

இந்த நிலையில் ஈரானின் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதாள அறையில் குடும்பத்துடன் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனாலும், அவரை அழிக்க எங்களால் முடியும் என இஸ்ரேல் சூளுரைத்துள்ள.

போர் விமானங்கள்

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் தொடர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், ஈரான் பாதுகாப்பு துறை தலைமை அலுவலகம், வெளியுறவுத்துறை அலுவலகம் ஆகியவற்றின் மீது போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் அவற்றை தரைமட்டமாக்கியுள்ளன. 

ஈரானில் ஆட்சி அமைக்க வியூகம் வகுக்கும் இஸ்ரேல்: பாதாள அறையில் பதுங்கிய முக்கிய புள்ளி | Leader Ayatollah Khamenei Hiding Underground

கடந்த 13ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரவேல் தாக்குதல் நடத்திய நிலையில் அன்றைய தினமே அயதுல்லா அலி கமேனி மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. 

ஆனால் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. ஈரான் அணு ஆயுதத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.

 இல்லையென்றால் அணு ஆயுத திட்ட கட்டமைப்புகளை இஸ்ரேல் முழுமையாக அழிக்கும். பாதாள அறையில் எவ்வளவு ஆழத்தில் தங்கி இருந்தாலும் அவரை எங்களால் தாக்க முடியும் என இஸ்ரேல் கூறி இருக்கிறது.

அமெரிக்காவின் தலையீடு

ஈரானைப் பொருத்தவரை பிரதமர் இருந்தாலும், திரை மறைவில் ஷியா மத தலைவரான அயதுல்லா அலி கமேனி தான் ஆட்சி செய்கிறார்.

ஈரானில் ஆட்சி அமைக்க வியூகம் வகுக்கும் இஸ்ரேல்: பாதாள அறையில் பதுங்கிய முக்கிய புள்ளி | Leader Ayatollah Khamenei Hiding Underground

அவரை அகற்றி விட்டு மக்களாட்சி அல்லது புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இஸ்ரேல் வியூகம் வகுத்து வருவதாகவும், அதன் காரணமாகத் தான் தற்போது ஈரானுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தி இருக்கிறது இஸ்ரேல் என்கின்றனர் சர்வதேச போர் நிபுணர்கள்.

மேலும் ஆரம்பத்தில் இந்த போரில் அமெரிக்காவின் தலையீடு பெரியதாக காணப்படாத காரணத்தினால் இந்த போர் சற்று பணிவான நிலையில் காணப்பட்டதாகவும், தெஹ்ரானில் வசிப்பவர்களை வெளியேறுமாறு அவர் ட்ரம்ப் எச்சரித்ததன் காரணமாக இந்த போர் உச்ச கட்டத்தை அடையும் எனவும் போரியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.