யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளைஞர் ஒருவர் தொடருந்து மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (17.06.2025) மாலை புங்கன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த
தலையசிங்கம் சுதாகரன் (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைஞனை மோதித் தள்ளிய தொடருந்து
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் நேற்று மாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள தொடருந்து நிலையத்துக்கு
அருகாமையில் தொடருந்து தண்டவாளத்தில் அமர்ந்திருந்துள்ளார்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த தொடருந்து இளைஞனை மோதித் தள்ளியது. இந்நிலையில்
இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

