கந்தளாயில் பழைய கட்டிடச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தளாய், சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய கலுகபுகே சரத் பெரேரா
என்பவர், தனது வீட்டிற்கு அருகிலுள்ள பழைய கட்டிடத்தின் சுவரை அகற்ற
முயன்றபோது அது இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக
தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சடலம் மேலதிக விசாரணைகளுக்காக கந்தளாய் மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.

