காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழுவின் கிருஷ்ணன் கோவிந்தராசன்
போட்டியின்றி ஏகமனதாக
தெரிவாகியுள்ளார்.
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான
கூட்டம் இன்று(19.06.2025) காரைநகர் பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி
ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
11 உறுப்பினர்களை கொண்ட காரைநகர் பிரதேச சபைக்கு நடைபெற்று முடிந்த
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சை குழு, தமிழ் மக்கள் கூட்டணி, அகில
இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகியன தலா
இரண்டு ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
சுயேட்சை குழு
தவிசாளர் பதவிக்காக
முன்மொழியப்பட்ட சுயேட்சை குழுவின் கிருஷ்ணன் கோவிந்தராசனும் பிரதி
தவிசாளருக்காக முன்மொழியப்பட்ட
தமிழ் மக்கள் கூட்டணியின் ஆன்டியையா விஜயராசாவும் போட்டியின்றி ஏகமனதாக
தெரிவாகினர்.

காரைநகர் பிரதேச சபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணி,
தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் சுயேட்சைக் குழு ஆகியவற்றுக்கிடையில் ஓர்
உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.




