முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுவீகரிக்கப்படும் மன்னார் பள்ளிமுனை காணிகள்: எடுத்துரைத்த அடைக்கலநாதன் எம்.பி

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(19.06.2025) விசேட அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“வன்னி மாவட்டத்தில் உள்ள 3 மாவட்டங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தின் கீழ்
பள்ளிமுனை என்னும் கிராமம் உள்ளது.

இங்கு வாழ்கின்ற மக்கள் கடல் தொழிலையே தமது வாழ்வாதாரமாக கொண்டு கடலினை அண்டி
வாழ்ந்து வருபவர்கள்.

உறுதிப் பத்திரங்கள்

இது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற கிராமம்.
இந்த கடலினை அண்டியதாக 24 குடும்பங்கள் 10 பேர்ச் காணி துண்டில்
அரசாங்கத்தினால் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில் 1984ஆம் ஆண்டு தொடக்கம் வாழ்ந்து வருகின்றார்கள்.

சுவீகரிக்கப்படும் மன்னார் பள்ளிமுனை காணிகள்: எடுத்துரைத்த அடைக்கலநாதன் எம்.பி | Mannar Pallimunai Lands To Be Acquired

இது தனி நபருக்கு சொந்தமான காணி. ஆனால் 1984ஆம் ஆண்டு இக்காணி துண்டுகளை
வீடமைப்பு திணைக்களம் வேண்டி வீடுகளை அமைத்து குடியேற்ற திட்டம் ஒன்றை நிறுவி
மீளவும் அங்கு குடியேறியவர்களுக்கு விற்று அதற்குரிய பணத்தையும் பெற்றுக்
கொண்டது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும்.

இது தனி நபருக்கு சொந்தமான காணிகள் மொத்தம்(2 acers and 02 perch) இதற்குரிய உறுதிப் பத்திரங்களும் இவர்களுடைய கைகளில் இருக்கின்றன.

நீதிமன்றில் வழக்கு

அண்மைக்கால யுத்தம் காரணமாக இந்த மக்கள் தாங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்த
பூர்வீக காணிகளையும், வீடுகளையும் கைவிட்டு இடப்பெயர்வை மேற்கொள்ள வேண்டிய
நிலைக்கு தள்ளப்பட்டது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

சுவீகரிக்கப்படும் மன்னார் பள்ளிமுனை காணிகள்: எடுத்துரைத்த அடைக்கலநாதன் எம்.பி | Mannar Pallimunai Lands To Be Acquired

மக்கள் 1990இல் இடம்பெயர்ந்த பின்பு இது இராணுவம், பொலிஸ், தற்பொழுது
கடற்படையினரின் முகாமாக இருப்பிடமாக மாறியிருக்கிறது.

அவர்கள் இந்த பொதுமக்களுக்கு சொந்தமான குடியிருப்புக்களை
ஆக்கிரமித்து தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து தங்களது சொத்தாக
மாற்றிக்கொள்ள முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், காணியுடைய உரிமையாளர்கள் இவற்றை மீட்டெடுப்பதற்காக நீதிமன்றில்
வழக்கு கொடுத்திருந்தார்கள். ஆனால் அரசாங்கம் காணி சுவீகரிப்புச் சட்டத்தின்
கீழ் இந்த காணிகளை அரச சொத்தாக மாற்றியமைக்க முயற்சிக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.