முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவைக் கந்தனின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா

இலங்கையின் தொன்மையும், வரலாற்றுப் பெருமையும் கொண்டு, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புக்களையும் கொண்டு உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள்புரியும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய 2025 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவ பெருவிழா இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட வெள்ளி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் இவ்வருடம் வெகு விமர்சையாகவும் கோலாகலமாகவும் நடைபெறவுள்ளது. 

ஜூன் 25, 2025 அதிகாலை 6.30 மணிக்கு கீரிமலை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கொடிப்புடவை பூஜை நடைபெறும். அதன் பின் கொடிப்புடவை ஊர்வலமாக கீரிமலை மாவிட்டபுரம் வீதியாக கொண்டு வரப்படும்.

ஜூன் 30, 2025 அன்று காலை 10.15 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று, நண்பகல் 12.06 மணியளவில் வெள்ளிக்கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஜூலை 22 பெரிய சப்பரத் திருவிழா இடம்பெறவுள்ளதுடன் ஜூலை 23 பஞ்சரத பவனி நடைபெறவுள்ளது.

ஜூலை 24  காலை 6 மணியளவில் கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்ததிருவிழா இடம்பெறவுள்ளதுடன் இரவு 8.30 அளவில் கொடியிறக்கத்திருவிழா இடம்பெறும்.

நீண்ட காலத்திற்கு பிறகு நடைபெறும் மாவைக்கந்தனின் மஹோற்சவ வைபவத்தில் அடியார்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு மாவைக்கந்தன் ஆலயத்திற்கு வருகை தந்து திருவிழா நிகழ்வுகளில் பங்குகொண்டு மாவைக்கந்தனின் அருட்கடாக்ஷம் பெற்று இன்புற்று சுகவாழ்வு வாழ அனைவரையும் வருக வருக ஆனந்தம் பெறுக என்று அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்