கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலக குழுத்தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து தேடப்பட்டு வரும் வரும் பெண்மணியான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தொலைக்காட்சி நேர்காணலின் போது பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (ananda wijepala)மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.
கொலை தொடர்பான தகவல்கள்
இதன்படி இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்கள் அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாகக் தெரியவரவில்லை என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் போது, கொலை தொடர்பான தகவல்கள் மற்ற சந்தேக நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான விசாரணை
இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்துச் சென்று அதனை துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்ததற்காக இஷாரா செவ்வந்தி தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.