ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் ( Volker
Turk ) மற்றும் அவரது குழுவினர் நேற்று (25) திருகோணமலையில் உள்ள ஆளுநர்
அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்துள்ளனர்.
இலங்கைக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வோல்கர் டர்க், நேற்று காலை
திருகோணமலையில் சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் ஆளுநர்
அலுவலகத்தில் விஜயம் செய்தார்.
முக்கிய விடங்கள்
மீள்குடியேற்றம், காணாமல் போனோர், மனித உரிமைகள் பாதுகாப்பு, போதைப்பொருள்
தடுப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலப் பிரச்சினை குறித்து அவர்கள்
விரிவாக விவாதித்தனர்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எடுத்த முடிவுகள்
மற்றும் அதன் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகள் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா, இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே
ஃபிராஞ்ச் Marc-André Franche மற்றும் குழுவினர், கிழக்கு மாகாணத்தின் தலைமைச்
செயலாளர் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின்
மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.












