முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கேரளாவில் சிக்கிய பிரித்தானியாவின் உயர் ரகசிய போர் விமானம்

கேரளாவில் (Kerala) சிக்கிய பிரித்தானிய (United Kingdom) F-35B போர் விமானம் ஹேங்கருக்கு நகர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு வாரங்களாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானியாவின் F-35B போர்விமானம், விரைவில் விமான நிர்வாகக் கழக ஹேங்கருக்கு நகர அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதற்கான சிறப்பு உபகரணங்களுடன் பிரித்தானிய இயந்திரப்பணி குழு இந்தியாவிற்கு (India) வரவுள்ள நிலையில், அதன் பின்னர் விமானம் ஹேங்கருக்கு நகர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

போர் விமானம்

முன்னதாக, F-35B இன் உயர் இரகசிய தொழில்நுட்பங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் காரணமாக ஹேங்கருக்கு நகர்த்துவதை பிரித்தானிய கடற்படை நிராகரித்ததாக தகவல்கள் வெளியானது.

கேரளாவில் சிக்கிய பிரித்தானியாவின் உயர் ரகசிய போர் விமானம் | Uk F 35B Fighter Jet Stuck In Kerala

இருப்பினும், தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என உறுதியளித்து நகர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படை

ஜூன் 14 அன்று, இந்தியக் கடற்படையுடன் கூட்டு கடல் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு HMS Prince of Wales கேரியருக்கு திரும்பிக்கொண்டிருந்த போது எரிபொருள் குறைவால் அவசரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேரளாவில் சிக்கிய பிரித்தானியாவின் உயர் ரகசிய போர் விமானம் | Uk F 35B Fighter Jet Stuck In Kerala

அதன்பின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்பட முடியாமல் இருந்தாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்தநிலையில், தற்போது இந்த விமானம் விரைவில் பழுது செய்யப்பட்டு செயலில் மீண்டும் இணைக்கப்படும் என பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்