முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படக்கூடாது! பொன்சேகா

வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள் விடுவிப்பின்போது
பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, வடக்கு, கிழக்கு காணி
விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவி்க்கையில் ,வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளின் மனோநிலையில் வாழும் சிலரும் இருக்கவே
செய்கின்றனர்.

விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் தரப்பினரும்
உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர்.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

ஒரு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானோர்
அவ்வாறு இருக்கலாம்.

அதேபோல் விடுதலைப்புலிகளை ஆசிர்வதித்த அரசியல்வாதிகளும் உள்ளனர்.
விடுதலைப்புலிகளை மீள் எழுச்சி பெற வைப்பதற்கு முற்படும் டயஸ்போராக் குழுவும்
உள்ளது.

வடக்கில் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படக்கூடாது! பொன்சேகா | Security During Land Release In The North Fonseka

இப்படியான அச்சுறுத்தல் இருப்பதால், போர் மூண்ட பிறகு முகாம்கள் அமைப்பது
பற்றி சிந்திக்காமல், தூர நோக்கு சிந்தனை அடிப்படையிலேயே முடிவுகள்
எடுக்கப்படும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் இருக்க
வேண்டும்.

அதற்காகப் போர்க் காலத்தில் இருந்ததுபோல் அல்ல. பாதுகாப்புக்குப்
பங்கம் ஏற்படாத வகையில் நகர்வுகள் இடம்பெறவேண்டும்.

பாதாளக் குழு

யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பைப் பலவீனப்படுத்தினால் அது யாழ்.
மக்களுக்குத்தான் சரி இல்லை. அங்கு ஆவா என்ற பாதாளக் குழுவொன்று இருந்தது.
கேரள கஞ்சாக்கள் வருகின்றன. வீதித் தடைகளை நீக்கினால் தெற்கிலுள்ள பாதாளக்
குழுக்கள் வடக்குக்குச் சென்று ஒளியக்கூடும்.

வடக்கில் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படக்கூடாது! பொன்சேகா | Security During Land Release In The North Fonseka

எனவே, பாதுகாப்பு நெறிமுறைகள்
அவசியம்.

சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கு இல்லை என்பதைப்
புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.