புதிய இணைப்பு
சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் 19 வயதுடைய
இளைஞர் ஒருவர் 25 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது
செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (29) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் 80 மில்லிகிராம் மற்றும்100 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
குறித்த இருவரையும் கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா காரைநகர் பகுதியில் கடறபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பெயரில்
சந்தேகத்திற்கிடமான படகை கடற்படையினர் மறித்து சோதனையிட்டபோதே கஞ்சா
கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தி வந்த படகில் இருந்த மூவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதோடு
படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

