நாடு முழுவதும் உள்ள காவல் நிலையத்திலிருந்து உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஐந்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய காவல்துறை ஆணையத்தின் (National Police Commission) ஒப்புதலை தொடர்ந்து குறித்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி, வெலிபன்ன காவல் நிலைய பொறுப்பதிகாரி K.C.P. டி சில்வா, எல்பிட்டிய பிரிவு பொது பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இடமாற்றம்
அத்தோடு, புதுளமில் பணியாற்றிய காவல் நிலைய பொறுப்பதிகாரி E.M.A.I.B. எகநாயக்க, நவகட்டேகம காவல் நிலையத்தின் புதிய காவல் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு (Colombo) மத்திய பிரிவில் பணியாற்றிய காவல்துறை பரிசோதகர் S.K. அனுரஜித், வெலிபன்ன காவல் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பதிகாரி
கரடியனாறு காவல் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த காவல்துறை பரிசோதகர் A.H.G.R.T. ஹேமச்சந்திர, அடுருப்பு வீதி காவல் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நவகட்டேகம காவல் நிலையத்தில் முன்பு பணியாற்றிய காவல்துறை பரிசோதகர் T.C. பாதும குமார, கரடியனாறு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்கள் சேவை தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

