முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் முகநூல் முறைப்பாடுகள்

இலங்கையில் முகநூல் மற்றும் செயற்கை நுண்ணறிவு முறைகேடுகள் தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

நாட்டில் சமூக வலைதளங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் Facebook, வாட்ஸ்அப் WhatsApp, இன்ஸ்டாகிராம் Instagram, ஸ்னெப்சாட் Snapchat மற்றும் டிக்டாக் TikTok உள்ளிட்ட தளங்களை தொடர்புடையவையாக உள்ளன.

இவ்வாறான முறைப்பாடுகளில் 90% முறைப்பாடுகள் பேஸ்புக் Facebook மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பானவை என கணனி அவசர பதிலளிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் முகநூல் முறைப்பாடுகள் | 90 Of Social Media Complaints In Lanka Involve Fb

கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் (SLCERT) பொறியியலாளர் சருகா தமுனுபொல, பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது சுமார் 70 இலட்சம் பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.

இவர்களில் 90 வீதமானவர்கள் சமூக ஊடகங்களில் செயற்பாட்டில் இருப்பவர்கள் எனவும், கடந்த 3 மாதங்களில் போலி கணக்குகள், ஹேக் செய்யப்பட்ட கணக்குகள், WhatsApp மோசடிகள் போன்ற முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் காரணமாக 21% பயனாளர்கள் மனஅழுத்தம் அடைந்துள்ளதாகவும், இதில் 10% ஆண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பலர் சமூக ஊடகங்களை  பயன்படுத்துவதை நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

இதே நேரத்தில், சாட்ஜிபிடி ChatGPT போன்ற ஜெனரேடிவ் செயற்கை நுண்ணறிவு Generative AI தொழில்நுட்பங்கள் தற்போது இலங்கையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், பல நன்மைகள் இருப்பினும், அவை தவறாக பயன்படுத்தப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

சிலர் செயற்கை நுண்ணறிவுAI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சாதாரண புகைப்படங்களைத் தொகுத்து போலியான மோசமான படங்களை உருவாக்கும் செயலில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.