ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 1482 ரூபாவுக்கும், 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 694 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்.


