முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகள் ஆனால் ஒரே ஆன்மா: மோடியின் கருத்தை நினைவூட்டும் ஸ்ரீ பால்ராஜ் நுனே

கொழும்பில் நடைபெற்ற தமிழ் பண்பாட்டின் உலகளாவிய மாநாடு வெறும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல, இது ஒற்றுமை, அடையாளம் மற்றும் எல்லைகளைத் தாண்டிய தமிழ் கலாசாரத்தின் நீடித்த சக்தியின் கொண்டாட்டமாகும் என பாரதிய ஜனதா கட்சியின் சட்டப் பிரிவின் முக்கிய உறுப்பினரும், தெலுங்கானா மற்றும் மத்திய கட்சிகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீ பால்ராஜ் நுனே தெரிவித்துள்ளார்.

தமிழ் பண்பாட்டு உலகளாவிய மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு நேற்று கொழும்பு மயூரதி மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ் குரல்களை ஒன்றிணைப்பது

தமிழ்நாடு திருநெறிய தமிழ் சைவசமய பாதுகாப்பு பேரவையின் தலைவர் க.சசிக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகள் ஆனால் ஒரே ஆன்மா: மோடியின் கருத்தை நினைவூட்டும் ஸ்ரீ பால்ராஜ் நுனே | India Sri Lanka 2 Countries But 1 Soul Bjp Member

இந்த நிகழ்வில் பிரதம உரையை ஆற்றிய ஸ்ரீ பால்ராஜ் நுனே, இந்த நிகழ்வு சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இது தமிழ் குரல்களை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல், பெண்களின் அதிகாரமளித்தல், இளைஞர் தலைமை, கலாச்சார பரிமாற்றம் மற்றும் கல்வி போன்ற கருப்பொருள்களிலும் கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய இலங்கை பயணத்தின் போது, “இந்தியாவும் இலங்கையும் இரண்டு நாடுகள், ஆனால் ஒரே ஆன்மா.” அந்த ஒரு ஆன்மா ஆயிரக்கணக்கான ஆண்டுகால பகிரப்பட்ட நாகரிகத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது என்று கூறியமையை, பால்ராஜ் நுனே நினைவூட்டினார்.

கலாசார சுற்றுலா திட்டங்கள்

இந்த நிலையில், தமிழ் பாரம்பரிய விழாக்கள், இலக்கிய பரிமாற்றங்கள், ராமாயணம் மற்றும் பௌத்த பாதைகள் போன்ற கலாசார சுற்றுலா திட்டங்களைத் தொடங்க இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகள் ஆனால் ஒரே ஆன்மா: மோடியின் கருத்தை நினைவூட்டும் ஸ்ரீ பால்ராஜ் நுனே | India Sri Lanka 2 Countries But 1 Soul Bjp Member

இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இளம் அறிஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள் இணைந்து பணியாற்ற அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.