முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் உயிருக்கு போராடியவருக்கு நோயாளர் காவு வண்டி மறுப்பு!

யாழில் (Jaffna) உயிருக்கு போராடிய நபரொருவருக்கு மருதங்கேணி வைத்தியசாலையில்
நோயாளர் காவு
வண்டி (ஆம்புலன்ஸ்) உதவி மறுக்கப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொதுச்சந்தையில் மயங்கி விழுந்து
உயிருக்கு போராடிய நபர் ஒருவருக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்திருக்கின்ற பொதுச் சந்தையில்
காய்கறிகளை வாங்குவதற்காக நபர் ஒருவர் இன்று (07) காலை வருகை தந்துள்ளார்.

காய்கறி கொள்வனவு 

இந்தநிலையில், காய்கறிகளை கொள்வனவு செய்து கொண்டிருக்கின்ற பொழுது திடீரென அவருக்கு வலிப்பு
ஏற்பட்டுள்ளது.

யாழில் உயிருக்கு போராடியவருக்கு நோயாளர் காவு வண்டி மறுப்பு! | Maruthankerny Hospital Denies Ambulance To Patient

இதனால் மயங்கி கீழே விழுந்த நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டு
இரத்தம் வடிந்துள்ளது.

வண்டியின் சாரதி

குறித்த சந்தையில் இருந்த பொதுமகன் ஒருவர் உடனடியாக அருகில் உள்ள மருதங்கேணி
வைத்தியசாலைக்கு சென்று சம்பவத்தை எடுத்து கூறியதுடன் நோயாளர் காவு
வண்டியையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

யாழில் உயிருக்கு போராடியவருக்கு நோயாளர் காவு வண்டி மறுப்பு! | Maruthankerny Hospital Denies Ambulance To Patient

மருதங்கேணி வைத்தியசாலையில் காணப்பட்ட நோயாளர் காவு
வண்டியின் சாரதியிடம் விடயத்தை
தெரியப்படுத்திய வேளை
இப்போது நோயாளர் காவு
வண்டியை விட முடியாது என்றும் வைத்தியர் தூங்குவதாகவும்
தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வைத்தியரை ஒருமுறை கேட்டு சொல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர இலக்கம்

இதையடுத்து, 1990 என்னும் அவசர இலக்கத்திற்கு அழைத்து வேறு நோயாளர் காவு
வண்டியை அழைக்குமாறும்
மருதங்கேணி வைத்தியசாலை நோயாளர் காவு
வண்டியின் சாரதியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் உயிருக்கு போராடியவருக்கு நோயாளர் காவு வண்டி மறுப்பு! | Maruthankerny Hospital Denies Ambulance To Patient

பின்பு, உயிருக்கு
போராடிக் கொண்டிருந்த நபரை காப்பாற்றுவதற்காக 1990 இலக்கத்திற்கு அழைத்து
நோயாளர் காவு
வண்டியை வரவழைத்ததாக குறித்த நபர் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக மக்கள் மருத்துவ தேவைகளை பெறுவதில் மருதங்கேணி வைத்தியசாலையில்
தொடர்ந்து சிக்கல்களை எதிர்நோக்கி வருவதுடன், இவ்வாறு அவசர தேவைக்கு உதவாத
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு பொதுமனாக கேட்டுக் கொள்வதாக
அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்