முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் மக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும்: சம உரிமை இயக்கம் கோரிக்கை

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ மையமாகப்பட்ட பொதுமக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என சம உரிமை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம உரிமை இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம்(7) யாழ்ப்பாணத்தில்
இடம் பெற்ற போது அந்த இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆட்சியில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
என்பது, எவ்வாறான சூழ்நிலையில் உருவாக்கப்பட்டது என்பதை நாங்கள் எல்லோரும்
அறிவோம்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

மிக நீண்ட கால அடக்குமுறை முதலாளித்துவத்தின் அரசியல் அழுத்தங்கள்,
பின்புறத்தில், இந்த ஏமாற்று அரசியல் தலைமைகளை இதயத்தை அதிகாரம் கொண்ட
அரசியல் தலைமை மாற்ற வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு
வந்தது.

தமிழ் மக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும்: சம உரிமை இயக்கம் கோரிக்கை | Equal Rights Movement Press Conference

வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சி பீடம்
ஏற்ற இந்த 25 மாவட்டங்களிலும் இருந்து மக்கள் அதிகளவான வாக்குகளை
வழங்கியிருந்தார். இப்பொழுது 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த மக்களின்
எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றி உள்ளதா என்பதை நாங்கள் நோக்க வேண்டும்.

குறிப்பாக அடக்குமுறை சட்டங்களாக இருக்கட்டும், போர்க்காலத்தில் வடக்கு
கிழக்கில் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் மீளவும் வழங்கப்படவில்லை,
அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை போன்ற பல்வேறு விடயங்களை
நாங்கள் கூறிக் கொண்டே செல்லலாம்.

சம உரிமை இயக்கம் என்ற வகையில், யுத்தம்
இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ மையமாகப்பட்ட, பொதுமக்களின் காணிகளை மீளவும்
கையளிக்கப்பட வேண்டும் என்று எமது இயக்கம் கோரிக்கை விடுக்கின்றது.

அரசியல் கைதிகள் விடுதலை

அதேபோல்
அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதேபோல் காணாமல் காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளுக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும். கடந்த கடந்த காலங்களில்
யுத்த செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டு, யுத்த செயற்பாட்டாளர்கள் போராளிகள்
இருக்கின்ற பின் புலத்தில், கடந்த காலத்தில் அமைச்சரவை பேச்சாளர் ஒருவர்
கூறியிருந்தார்.

தமிழ் மக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும்: சம உரிமை இயக்கம் கோரிக்கை | Equal Rights Movement Press Conference

இவர்கள் குற்றம் இளைத்தவர்கள் என்பதனால்  சிறை
வைக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் கைதிகள் இல்லை என்ற வகையில் அவர்
கூறியிருந்தார்.

நாங்கள் திட்டவட்டமாக கூறுகின்றோம்.அவர்கள் அரசியல்
செயற்பாடுகளில் ஈடுபட்டதால் சிறை
வைக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நாங்கள் கூறுகின்றோம் அவர்கள் அரசியல் கைதிகள்.
அவர்கள் எந்தவித நிபந்தனையும் என்று விடுவிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.