ஹிருணிக்காவால் (Hirunika Premachandra) பேருந்து நிலையத்தில் செருப்பால் அடித்து துரத்தப்பட்ட அருண் சித்தார்த் ஹிருணிக்கா மீது காவல்துறையில் ஒரு முறைப்பாடு கூட முன்வைக்க முடியவில்லை, இந்நிலையில் விடுதலை புலிகளின் தலைவர் பற்றி அவர் விமர்சிக்கின்றார் என தம்பி தம்பிராசா தெரிவித்துள்ளார்.
கேவலமாக பணத்திற்கு தமிழினத்தை சாதி பேசி கூறு போட நினைக்கும் அருண் சித்தார்த்தை தமிழினம் எப்போதும் அனுமதிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தம்பி தம்பிராசா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் வந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பற்றி தைரியமாக பேசிப் பாருங்கள் என அருண் சித்தார்த்தை நோக்கி தம்பி தம்பிராசா சவால் விடுத்துள்ளார்.
அவர் தெரிவித்த முழுமையான கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்…..

