முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் யுவதி உட்பட இருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இளம் குடும்பப் பெண் ஒருவரும் யுவதி ஒருவரும் இருவேறு காரணங்களுக்காக தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளனர்.

இதன்படி கடன் தொல்லை காரணமாக இளவாலை பகுதியைச் சேர்ந்த
அரிச்சந்திரன் வினோதா (வயது – 36) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார்
உயிரிழந்துள்ளார்.

கடன் கொடுத்தவர்களால் தொல்லை

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில்
உயிர்மாய்த்த பெண்ணிற்கு கடன் கொடுத்தவர்களால் தொல்லை ஏற்பட்டது.

கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் நேற்றையதினம் உயிர் மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் யுவதி உட்பட இருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு | Two Woman Commit Suicide In Jaffna

 இதேவேளை நேற்றையதினம் (09) புத்தூர் – வாதரவத்தை, வீரவாணி பகுதியில் யுவதி ஒருவர்
தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். கிளிநொச்சி – முழங்காவில் பகுதியைச்
சேர்ந்த லோகவேந்தன் றுகிந்தா (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு
உயிர்மாய்த்துள்ளார்.

மன அழுத்தம் 

முழங்காவில் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி புத்தூர் பகுதியில் உள்ள
உறவினரின் வீட்டில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தில் தாதியர் பயிற்சிநெறியில்
ஈடுபட்டு வந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் யுவதி உட்பட இருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு | Two Woman Commit Suicide In Jaffna

 இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக நேற்றையதினம் தவறான முடிவெடுத்து
உயிர்மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்