முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலைதூக்கும் பாதாள உலக கும்பல்கள்: காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

மலேசியாவில் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த தொடர்பில் சிறப்பு ஊடக சந்திப்பு நடத்தப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 09 ஆம் திகதி மலேசியாவில் இன்டர்போலால் கெஹல்பத்தர பத்மே கமாண்டோ சலிந்த கைது செய்யப்பட்ட சம்பவம் சமூகத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியது.

இந்தக் கைது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களைப் பெற, இந்தச் செய்தி தவறானது என்று வேறு செய்திகள் வெளியாகியுள்ள சூழலில், எமது ஊடகப்பிரிவானது காவல்துறை ஊடகப் பிரிவை தொலைபேசியில் தொடர்பு கொண்டது.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை 

அதன்போது, கைது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் காவல்துறையினருக்கு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டதுடன், தகவல் கிடைத்தவுடன் விளக்கம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

தலைதூக்கும் பாதாள உலக கும்பல்கள்: காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு | Alleged Organized Crime Gang Arrested In Malaysia

அதன்படி, இந்த விடயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க விரைவில் சிறப்பு ஊடக சந்திப்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக மண்தினு பத்மசிறி என்ற கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகள் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டனர்.

அதன்படி, கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் கடந்த 9ஆம் திகதி மலேசியாவில் கைது செய்யப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, இலங்கை காவல்துறையினர் இந்த கைதுகள் தொடர்பான தகவல்களை இன்டர்போலிடம் அதிகாரப்பூர்வமாகக் கோரியதாகக் கூறப்பட்டது.

தவறான செய்திகள்

இருப்பினும், நதுன் சிந்தகவின் மனைவி மஹாவேவா மஹேஷிகா மதுவந்தி, தனது கணவர் கெஹல்பத்தர பத்மேவுடன் மலேசியாவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தவறான செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக 500 மில்லியன் இழப்பீடு கோரி சட்ட வழக்கு தொடர்ந்தபோது, அந்தச் செய்தி தவறானது என்று தெரிவிக்கப்பட்டது.

தலைதூக்கும் பாதாள உலக கும்பல்கள்: காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு | Alleged Organized Crime Gang Arrested In Malaysia

அதன்படி, சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களால் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அது நதுன் சிந்தக மற்றும் அவரது குடும்பத்தினரின் சமூக நற்பெயருக்கு சேதம் விளைவித்துள்ளதாகவும் இந்தக் கடிதங்கள் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.