முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அபாயகரமான நிலையில் சாவகச்சேரி நவீன சந்தைக் கட்டிடம்

சாவகச்சேரி (Chavakachcheri) நகரசபையின் நவீன சந்தைக் கட்டிடத்தொகுதி இடிந்து விழக்கூடிய
அபாய நிலையில் உள்ளதாக நகராட்சி மன்ற உபதவிசாளர் தெரிவித்தார்.

சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தை கட்டடதொகுதி மற்றும் நகர்புறங்களில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற விளம்பரப்பலகைகள் தவிசாளரின் ஆலோசனைக்கு
அமைவாக உப தவிசாளர் மற்றும் உறுப்பினர் கண்கானிப்பில் இன்றையதினம்
அகற்றப்பட்டது.

இதன் போது நவீன சந்தைக் கட்டிடத்தில் விளம்பரப் பலகைகளை அகற்றிய பொழுது
கட்டிடத்தின் நடைபாதை பக்கசுவர் இடிந்து விழும் அபாயத்தில் காணப்பட்டது.

இதனால் குறித்த அபாயகரமான பகுதியும் உபதவிசாளரால் அகற்றப்பட்டது.

இந்நிலையில் கட்டிடத்தின் கூரைப்பகுதியில் ஏறி கட்டிடத்தின் நிலைமை தொடர்பில்
அவதானித்த உபதவிசாளர் கிஷோர் கூரை மீது பொருத்தப்பட்டுள்ள அனைத்து
விளம்பரப்பலகைகளையும் அகற்ற உத்தரவிட்டார்.

குறித்த கட்டிடம் 1980 ஆம் ஆண்டு கட்டப்பட்ட போதிலும் 2000 ஆம் ஆண்டு
யுத்தத்தில் கடுமையான அழிவடைந்து மீள் நிர்மானம் செய்யப்பட்டு மக்கள்
பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் உடைந்து விழும் ஆபாய
நிலையில் உள்ளதால் வர்த்தகர்கள், பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு
உடனடியாக கட்டிடங்கள் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்று இதே அளவுப் பிரமாணம்
மற்றும் வடிவமைப்பில் இந்த இடத்திலேயே புதிதாக அமைக்கப்பட வேண்டும் என
உபதவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்