முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா மாநகரசபையினருக்கும் வர்த்தகர்களுக்குமிடையில் முறுகல்

புதிய இணைப்பு

வவுனியாவிலுள்ள வீதியோர கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை வவுனியா மாநகரசபையால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இடத்திலிருந்து வேறு மாற்றீடங்களில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையினருக்கும் வர்த்தகர்களுக்குமிடையில் முறுகல் | Tamil Shops Removed In Vavuniya Protest

அதற்கமையவே அகற்றப்படாத வர்த்தகநிலையங்களை அகற்றும் நடவடிக்கையை மாநகரபை இன்றையதினம் முன்னெடுத்துள்ளது.

இதன்போது வர்த்தக உரிமையாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வர்த்தகர்களுக்கும்- மாநகரசபை உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அவ்விடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் அகற்றப்பட்டுள்ளன.

மேலதிக தகவல்: திலீபன்

முதலாம் இணைப்பு

வவுனியா மாநகரசபையால் நேற்றையதினம்(13) யாழ் வீதியில் வீதியோரங்களில் உள்ள தமிழர்களின் சில கடைகளை போக்குவரத்துக் இடையூறாக இருப்பதாக தெரிவித்து அகற்றப்பட்டிருந்தததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு அகற்றப்பட்ட வீதியோரக் கடைகளில் இருந்த பழங்கள், மரக்கறிகள் உழவியந்திரத்தில் ஏற்றி மாநகர சபை வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பெரும் விசனம்

குறித்த பொருட்கள் மாநகர சபை வளாகத்துக்கு கொண்டு சென்றதன் பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அந்த பழங்களை பைகளில் இட்டு தாம் கொண்டு செல்வதற்கு தயாராக இருந்ததோடு சிலர் பழங்களை உண்டு மகிழ்ந்ததையும் அவதானிக்க கூடியதாக காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாநகரசபையினருக்கும் வர்த்தகர்களுக்குமிடையில் முறுகல் | Tamil Shops Removed In Vavuniya Protest

வீதியோரத்தில் வாழ்வாதாரத்துக்காக தொழில் செய்தவர்களின் பொருட்களை உழவியந்திரத்தில் ஏற்றி சென்ற மாநகரசபை ஊழியர்கள் குறித்த பொருட்களை தாம் எடுத்துச் செல்ல முற்பட்டதும் உண்டு களித்ததும் பெரும் விசனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதேவேளை பொருட்களை இழந்த சாதாரண வியாபாரிகள் துன்பத்தில் இருக்கும் போது அவர்களின் பொருட்களை எடுத்துச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகவும் காணப்படுவதாகவும் பைகளில் இடப்பட்ட பழங்கள், மரக்கறிகளை அங்குள்ள வேறுயாரும் கொண்டு செல்வதற்காக ஊழியர்களை பயன்படுத்தினரா எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையினருக்கும் வர்த்தகர்களுக்குமிடையில் முறுகல் | Tamil Shops Removed In Vavuniya Protest

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.