முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இயக்குனர் வசந்த் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த சிறந்த படங்கள்

இயக்குனர் வசந்த்

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய இயக்குனர்களில் ஒருவர் வசந்த்.

காதல், குடும்பம், பாசம் என எல்லாம் கலந்த கலவையாக சிறந்த படங்கள் இயக்கி நிறைய விருதுகளையும் வென்றுள்ளார். அப்படி தமிழ் சினிமாவில் வசந்த் இயக்கத்தில் வெளியான சிறந்த திரைப்படங்கள் சிலவற்றை காண்போம்.

இயக்குனர் வசந்த் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த சிறந்த படங்கள் | Best Vasanth Movies In Tamil

கேளடி கண்மணி

1990ம் ஆண்டு ஜுலை 27ம் தேதி வசந்த் இயக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ராதிகா நடிக்க வெளியான திரைப்படம் கேளடி கண்மணி.

அப்பா-மகளின் பாசத்தை உணர்த்தும் படமாக அமைந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட 285 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.

இயக்குனர் வசந்த் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த சிறந்த படங்கள் | Best Vasanth Movies In Tamil

ஆசை

முதல் படமே பெரிய வெற்றியை காண அடுத்து வசந்த் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளிவந்த படம் தான் ஆசை.

அஜித், சுவலட்சுமி, பிரகாஷ் ராஜ், ரோகிணி, பூர்ணம், விஸ்வநாதன் என பலர் நடிக்க ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 4.9 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வணிக ரீதியாக வெற்றிப் பெற இப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.

இயக்குனர் வசந்த் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த சிறந்த படங்கள் | Best Vasanth Movies In Tamil

நேருக்கு நேர்

தமிழில் 1997ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் நேருக்கு நேர்.
ரசிகர்களின் பேராதரவை பெற்ற இப்படத்தின் மூலம் தான் சூர்யா நாயகனாக அறிமுகமானார்.

தேவா இசையமைப்பில் இப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களுமே செம மாஸ் ஹிட் தான்.

இயக்குனர் வசந்த் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த சிறந்த படங்கள் | Best Vasanth Movies In Tamil

பூவெல்லாம் கேட்டுப்பார்

1999ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பூவெல்லாம் கேட்டுப்பார்.

இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய வசந்த் மனைவி ரேணுகா தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.

இயக்குனர் வசந்த் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த சிறந்த படங்கள் | Best Vasanth Movies In Tamil

ரிதம்

இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த படமாக உள்ளது ரிதம்.

அர்ஜுன், மீனா, ஜோதிகா, ரமேஷ் அரவிந்த், லட்சுமி, நாகேஷ், மணிவண்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களுமே செம ஹிட்.  

இயக்குனர் வசந்த் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த சிறந்த படங்கள் | Best Vasanth Movies In Tamil

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்