வெளிநாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் வேண்டுகோளின் பேரில் வவுனியா விமானப்படை தளம் அகற்றப்பட்வுள்ளதாக புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
அக்கட்சி நேற்று(16.07.2025) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
வவுனியா விமானப்படை தளம்
“வவுனியா விமானப்படை தளம் அகற்றப்பட உள்ளது. இது மிகவும் முக்கியமான விமானப்படை தளம். இந்த விமானப்படை தளம் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்துள்ளன.

1985 ஆம் ஆண்டு இந்த விமானப்படை தளம் மூன்று கட்டங்கள் அமைக்கப்பட்டது. அப்போது இந்த நிலங்களுக்கான பணம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி இந்த விமானப்படை காணி தொடர்பில் ஞானசம்பந்தன் என்பவர் ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில், “இந்தக் காணி அவரது தாயார் மீனாட்சி சிவபாதசுந்தரத்துக்கு சொந்தமானது என்றும் அதனை விடுவித்து தருமாறும் கோரியுள்ளார்.
காணி விவகாரம்
பின்னர், குறித்த கடிதம் பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. பிரதமர் அலுவலகம் அதை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்புகிறது.

அமைச்சின் சிரேஷ்ட செயலாளர் எம்.ஏ.எம்.அரீபா என்பவருக்கு இது தொடர்பில் அராய்ந்து செயற்படுமாறு தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அரிபா பாதுகாப்பு செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி, இந்த காணியை சிவில் விமான போக்குவரத்து அமைச்சுக்கு ஒப்படைக்க உத்தரவிடுகிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் படி, அரிபாவுக்கு குறித்த உத்தரவுகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கியதாக கூறப்படுகிறது” என கூறியுள்ளார்.

