தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிக்கு நேற்று(17) மாலை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்டவர்கள் சென்றிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தனி விஜயம்
இந்தநிலையில், விகாரை அமைந்துள்ள பகுதிக்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் நேற்று(17) மாலை சென்றிருந்தனர்.
இதன்போது குறித்த பகுதியில் கட்டடம் கட்டுவதற்காக ஒரு கிடங்கு வெட்டப்பட்டிருக்கின்ற நிலையை அவதானிக்க முடிந்ததாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்தார்.
தனித்தனி விஜயத்தினை மேற்கொண்டிருந்த இரண்டு குழுவினரும் தையிட்டி விகாரையில்
சந்தித்து மேலும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.




