நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை
கூடவுள்ளது.
நாடளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நிலையியற்
கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்குநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு பிரேரணை
இதனையடுத்து காலை 10 மணி முதல் 11 மணிவரை வாய்மூல
விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11 மணி முதல் 11.30 மணி
வரை நிலையியற் கட்டளை 27 (2)இன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை
வேலையாட்களின் வரவு – செலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம்
(2005ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது), வேலையாட்களின்
வரவு – செலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் (2016ஆம் ஆண்டின்
4ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கானது) மற்றும் சேவையாளர்களின் தேசிய
குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை மீதான இரண்டாவது மதிப்பீட்டு
விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாட்களின்
வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு ஆகியவற்றுக்கு
எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய மூன்று சட்டமூலங்களும் விசேட
பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் மாலை 5 மணி முதல் 6 மணி வரை எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும்
ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
சபை ஒத்திவைப்பு நேரம்
மறுநாள் புதன்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை கம்பனிகள்
(திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்காக நேரம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை சபை
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை இலங்கை
மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்துக்காக
நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை
ஆளுங்கட்சியால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான
விவாதம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை மறைந்த
நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், அபேரத்ன பண்டார ஹேரத் பிலபிட்டிய,
டபிள்யூ.பி.ஏக்கநாயக்க, லக்கி ஜயவர்தன மற்றும் மாலினி பொன்சேகா ஆகியோர்
தொடர்பான அனுதாபப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின்
போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

