பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகமலே பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட
அதிரடிப்படை சிரஸ்தாவெல முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்றைய தினம் (24.07.2025) விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
இதன்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 2 வெற்று
குண்டுகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை பொத்துவில் பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணை
கைதான சந்தேகநபர் பொத்துவில் 5ஐச் சேர்ந்த 40 வயது
மதிக்கத்தக்கவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

