சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கில் கிழக்கில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறையிலும் (Ampara) இன்று (26) பாரிய மக்கள் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இதன்போது ”நிலைமாறற்ற காலத்தில் நிலைமாறு கால நீதியை திணித்து தமிழ் மக்களை ஏமாற்றாதீர்”, ”நான் பாடையிலே போக முன்னே, என் மகனே கடமை செய்ய வாராயோ?”, ”காணாமல் ஆக்கிய பிள்ளைகள் எங்கே, சிறிலங்கா அரசே பதில் கூறு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையெழுத்து வேட்டை
அத்துடன் இந்தப் போராட்டத்தின் இறுதியில் கையெழுத்து வேட்டையும் இடமபெற்றது.

இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.











