அமெரிக்காவின் கடற்படைக் கமாண்டோக்களான சீல் படையணியின் பாடநெறியை இலங்கைக் கடற்படை அதிகாரியொருவர் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளார்.
இலங்கைக் கடற்படையின் லெப்டிணன்ட் கொயன் சமித என்பவரே இவ்வாறு சீல் படையணியின் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து இலங்கைக் கடற்படைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
உலகின் மிகக் கடினமான கடற்படை மற்றும் கமாண்டோ பயிற்சி நெறியாகக் கருதப்படும் மேற்படி பாடநெறிய சுமார் 14 மாதங்கள் கொண்டதாகும்.
மிகக் கடினமான பயிற்சி
இந்நிலையில் குறித்த பாடநெறியை பூர்த்தி செய்த இலங்கையின் முதலாவது கடற்படை அதிகாரி என்ற பெருமையை லெப்டிணன்ட் கொயன் சமித பெற்றுள்ளார்.

அதன் மூலம் அமெரிக்க சீல் படையணியின் பதக்கத்தை தோற்பட்டையில் பதித்துக் கொள்ளும் வாய்ப்பை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
லெப்டிணன்ட் கொயன் சமித, இலங்கைக் கடற்படையின் மிகச் சிறந்த படையணியான எஸ்.பி.எஸ் எனப்படும் விசேட தாக்குதல் படைப்பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

