செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 101 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 95 மனித என்புத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 22வது நாளாக இன்று (27) முன்னெடுக்கப்பட்ட போது 5 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அரை நாட்கள் மாத்திரமே அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
அகழ்வுப் பணிகள்
இந்த நிலையில் இன்று புதிதாக என்புத் தொகுதிகள் எவையும் அடையாளம் காணப்படவில்லை.

செம்மணி – சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம்
கட்ட அகழ்வுப் பணிகள் 22வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி
ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை யாழ். (Jaffna) செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று (26) வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 46 சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










https://www.youtube.com/embed/hm01SfRCqFI

