எரிபொருள் நுகர்வு 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.
புதிய எரிபொருள் நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
30 சதவீதம்
மேலும் அவர், “அதேவேளை, மின்சார உற்பத்திக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகளவில் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கையின் 70 சதவீத மின்சாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்காக சூரிய, காற்று, நீர் மற்றும் உயிரி ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

