முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு எதிராக UNHRC அமர்வில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானம்

பிரித்தானியா மற்றும், அதன் மையக் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து, இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் மற்றும் மீதமுள்ள பிற விடயங்களைத் தொடர்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு ,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் (UNHRC) அமர்வில் ஒரு புதிய தீர்மானத்தை முன்மொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் (UNHRC) அமர்வில் இந்த விடயம் வெளிக்கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகியவை மையக் குழுவின் மற்ற உறுப்பினர்களாகும்.

பொறுப்புக்கூறல் வியங்கள் 

இதன்படி இலங்கை அரசியலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள்

சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொறுப்புக்கூறல் வியங்கள் நிராகரிக்கப்பட்ட போதிலும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் 51/1 இன் ஆணையை நீட்டிக்கும் வகையில், கடந்த ஆண்டு ஒக்டோபரில் UNHRC ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

இலங்கைக்கு எதிராக UNHRC அமர்வில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானம் | New Resolution Against Sri Lanka At Unhrc Session

எனினும், HRC தீர்மானம் 51/1 மற்றும் அதற்கு முந்தைய HRC தீர்மானம் 46/1 ஆகியவற்றை இலங்கை நிராகரித்தது.

இதன் கீழ் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்குள் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை நிறுவப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், “சமீபத்திய காலங்களில் லண்டனில் உள்ள பிரித்தானிய அதிகாரிகளிடமிருந்து, இந்த ஆண்டு செப்டம்பரில் அத்தகைய தீர்மானம் கொண்டு வரப்படும் என்று UNHRC அதன் இலங்கை திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று அறிந்ததாகக் கூறியுள்ளார்.

தற்போதைய தீர்மானம் செப்டம்பரில் காலாவதியாகிவிடும் என்றும், புதிய தீர்மானம் பிரித்தானியா மற்றும் நாடுகளின் முக்கிய குழுவால் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணையர் 

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், ஜூன் 23 முதல் 26, 2025 வரை இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இது 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் மேற்கொண்ட முதல் விஜயமாகும்.

இலங்கைக்கு எதிராக UNHRC அமர்வில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானம் | New Resolution Against Sri Lanka At Unhrc Session

தனது விஜயத்தின் போது, சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமர்  உள்ளிட்ட உயர் மட்ட அரசாங்க அதிகாரிகளுடன் உயர் ஸ்தானிகர் டர்க் கலந்துரையாடினார்.

இந்நிலையில் அடுத்த வாரம் இலங்கை குறித்த அறிக்கையை அவர் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர்க்காலம் தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு UNHRC பலமுறை அழைப்பு விடுத்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன உட்பட சில முன்னாள் இராணுவ அதிகாரிகள் மீது கடந்த கால மீறல்கள் தொடர்பாக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.