கோட்டாபய பாகம் 2 ஆக ஜனாதிபதி அநுர மற்றும் (NPP) அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சமூகத்தில் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோட்டாபயவுக்கு (Gotabaya Rajapaksa) நடந்தது அநுரவுக்கு நடக்கும் என்றும் சமிந்த விஜேசிறி கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அன்று நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa) நில்பலகாய என்ற திட்டத்தை ஆரம்பித்து இளைஞர்களை அரசியல் மயப்படுத்துவதாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி இன்று அதையே செய்கிறது.
கெசினோ ஹோட்டலை திறந்து வைத்த ஜனாதிபதி
தற்போதைய அரசாங்கம் 76 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் விதைத்து வந்த வெறுப்பை இன்றும் தொடர்கிறது.
கெசினோவுக்கு எதிராக பெரும் போராட்டத்தை உருவாக்கிய அநுர இன்று ஜனாதிபதியாக கெசினோ ஹோட்டலை திறந்து வைக்கிறார்.

கெசினோ எமது காலாசாரத்தை அழிக்கும் என்று கூறி அன்று அநுரகுமார மதத் தலைவர்களை இதற்கு எதிராகக் செயற்பட வைத்தவர். அவர்களின் பொய்களை மக்கள் இன்று அறிந்து கொண்டுள்ளனர்.
புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தப் போவதாக மார் தட்டிய அரசாங்கம் இன்று அதை நடைமுறைக்கு கொண்டு வரவில்லையென்பது இளைஞர்களுக்குத் தெரியும்” என தெரிவித்துள்ளார்.

