கட்டுநாயக்க விமான நிலைய மருத்துவப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்பது மிமீ பிஸ்டல் வகை துப்பாக்கிக்கான 08 உயிருள்ள தோட்டாக்கள் அடங்கிய மெகசின் ஒன்றுடன் அவர் விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய முனையத்திற்குள் நுழைந்தபோது ஸ்கேனர் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இது தொடர்பான விசாரணையில், மருத்துவருக்கு கடந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் ஒரு வருட காலத்திற்கு துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

எனினும், விமான நிலைய வளாகத்திற்கு தோட்டாக்கள் ஏன் கொண்டு வரப்பட்டன என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

