மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) குடும்பத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இவரை சற்று முன்னர் (06.08.2025) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்தமையினால் அரசாங்கத்திற்கு நிதி இழப்புகள் ஏற்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.