முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடு முழுதும் குறைந்த விலையில் சீனி! அமைச்சர் உறுதி

இலங்கை சீனி நிறுவனத்தினூடாக குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு சீனி வழங்கப்படும் என தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். 

இலங்கை சீனி நிறுவனத்தின் மொத்த விற்பனை விநியோக மையங்களின் வலையமைப்பு அடுத்த மாதத்திற்குள் 25 மாவட்டங்களில் நிறுவப்பட்டு சீனி குறைந்த விலையில் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

பெல்வத்த – செவனகல

லங்கா சீனி நிறுவனத்தைச் சேர்ந்த பெல்வத்த மற்றும் செவனகல கரும்பு விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் நெருக்கடி நிலை ஏற்பட்டது.

நாடு முழுதும் குறைந்த விலையில் சீனி! அமைச்சர் உறுதி | Sunil Handunneththi Sugar Price

இந்த நிறுவனங்களின் நிதி நெருக்கடி தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன், நாங்கள் இந்த நிறுவனங்களை கையகப்படுத்தியபோது, பெல்வத்தவில் 3,847 ஊழியர்களும், செவனகலவில் 1,269 ஊழியர்களும் இருந்தனர்.

மேலும் நிலையான சட்டப்பூர்வ கொடுப்பனவுகள்  3,977 மில்லியன் ரூபாவாக  இருந்தன. விவசாயிகளுக்கு  609 மில்லியன் ரூபாவும்,   510 மில்லியன் ரூபா வழங்குனர்களுக்கும்  1,176 மில்லியன் ரூபா வங்கிக் கடன்கள் உட்பட  6,279 மில்லியன் ரூபா கொடுக்க வேண்டி இருந்தது.

அத்தோடு சுமார் 33,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்ட சீனி மற்றும் சுமார் 5.5 மில்லியன் லீட்டர் எத்தனோல் ஆகிவற்றோடு பொறுப்பேற்றோம்.
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அனைத்து சிரமங்களையும் மீறி, பெல்வத்தையில் 14,201 மெட்ரிக் டன் சீனி உற்பத்தி செய்தோம்.

நாடு முழுதும் குறைந்த விலையில் சீனி! அமைச்சர் உறுதி | Sunil Handunneththi Sugar Price

8,468 மெட்ரிக் டன்களை விற்பனை செய்ததில் 1652 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது. அவ்வாறே செவனகலயில்  877 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டினோம்.
ஜூலை 31 நிலவரப்படி பெல்வத்தை மற்றும் செவனகலை இரண்டிலிருந்தும் 27,292 மெட்ரிக் டன் சீனி மற்றும் 857,185 லீட்டர் எத்தனோல் தற்போது விற்பனைக்கு இருக்கிறது.

இதனால் விவசாயிகள், வழங்குனர்களுக்கு பணம் செலுத்துவதில் இரண்டு மாத தாமதம் ஏற்பட்டதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
எதிர்க்கட்சிகள் பெல்வத்தை மற்றும் செவனகலையை அரசாங்க எதிர்ப்பு மையமாக மாற்ற விவசாயிகளை பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.