முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐ.நாவுக்கு சரியான விதத்தில் செய்தியை சொல்வோம் – எம். ஏ சுமந்திரன் சவால்

தமிழ் மக்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை நாங்கள் சரியான விதத்தில் சொல்லுவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை
தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளருமான எம். ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (06.08.2025) புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்ட விடயத்தினை குறிப்பிட்டுளார்,

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாடாளுமன்றத்தினால் பதவியில் இருந்த தேசபந்து தென்னக்கோனை பதவி விலக்குகின்ற பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றம் பட்டிருக்கின்றது.

பதவியிலிருந்து விலக்குகின்ற சட்டம்

அதிகாரிகளை பதவியிலிருந்து விலக்குகின்ற சட்டம் முதன் முதலில் பாவிக்கப் பட்டிருக்கின்றது.

ஐ.நாவுக்கு சரியான விதத்தில் செய்தியை சொல்வோம் - எம். ஏ சுமந்திரன் சவால் | Message To Un Right Way Ma Sumanthiran

இது 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்
அதாவது அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டதன் பின்பு அந்த அரசியல
மைப்பு பேரவையினால் பதவியில் அமர்த்தப்படும் இரண்டு அதிகாரிகளான சட்டமா அதிபர், காவல்துறை மா அதிபர் இவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான வழிமுறை ஒன்று இச்சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இருபது வருடங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த இந்த சட்டம் முதன்
முறையாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகவே இது ஒரு முக்கியமான விடயம்.

சுயாதீனமான இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் வேறு விதமாக பதவி
நீக்கப்பட முடியாது.
இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட
போது ஒருவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. 

பிரிவினை இல்லாமல் வாக்களிப்பு

அரசாங்கம் எதிர்க்கட்சி என்ற பிரிவினை இல்லாமல் வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

ஐ.நாவுக்கு சரியான விதத்தில் செய்தியை சொல்வோம் - எம். ஏ சுமந்திரன் சவால் | Message To Un Right Way Ma Sumanthiran

குறிப்பாக சிரானி பண்டாரநாயக்காவை பதவி நீக்கும் போது நாடாளுமன்றம் இரண்டாகப் பிரிந்தது அந்தப் பதவி நீக்க பிரேரணையானது தவறான
முறையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆட்சி மாற்றத்தின் பின் தவறான பிரேரணை என்ற அடிப்படையில் அவர்
மீளவும் பதவியில் அமர்த்தப்பட்டார்.

இம்முறை சுயாதீன பதவியில் உள்ள ஒருவர் எதேச்சதிகாரமாக பதவி நீக்கப்படாமல் விசாரணை குழு அறிக்கையினை வைத்து அதனை நாடாளுமன்றத்தில் விவாதித்து மிகப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றபட்டிருக்கிறது என  எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.