எதிர்க்கட்சிகள் வேறு ஒரு அரசியல் வியூகத்தை ஏற்பத்திக் கொண்டு அரசியலில் ஈடுபடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில்(07.08.2025) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உலகில் ஏற்பட்ட பல யுத்தங்கள் மற்றும் இதர பிரச்சினைகளில் இலங்கையின் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டு அரசாங்கம் கலைக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கனவு கண்டனர்.
மின் கட்டணம்
பல பொய்யான தரவுகளை வைத்து பல பேட்டி நிகழ்ச்சிகளில் சில நாட்களில் அரசு உடைந்து விடும் என்றனர். அத்தோடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிக்கு முகம் கொடுக்க முடியாமல் போகலாம் என்றனர்.

இவ்வாறான குரூர சிந்தனைகளில் எதிர்க்கட்சிகள் செயற்பட வேண்டாம். அரசியலில் மாற்று வழிகளை தேடி கொள்ளுங்கள்.
மின்சார மறுசீரமைப்பு திருத்தச் சட்ட மூலத்தில் மின் கட்டணம் அதிக்கும் என நாடாளுமன்றத்தில் பல நிபுணர்கள் பேசினர். அது தொடர்பான தரவுகளை தவறாக சமர்ப்பித்தனர்.

மின்சார சபையில் பல பில்லியன் கடன்கள் செலுத்த வேண்டியிருந்து. அவற்றை செலுத்துவதோடு சபையின் மறுசீரமைப்புக்கு சென்றோம். நாம் கட்டாயம் மின் கட்டணத்தை குறைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

