குண்டசாலை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரும் அவரது
இரண்டு சகாக்களும் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி ரூ.500 மில்லியன் மதிப்புள்ள இரத்தின கற்களை விற்பனை செய்ய
முயன்றமைத் தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
குறித்த கற்களை வாங்குவதற்காக போலியான ஒருவரை ஈடுபடுத்தி அவற்றின் விலையை ரூ.1
மில்லியனாகக் குறைத்து விற்பனை செய்ய முயற்ச்சித்துள்ளனர்.
இந்த இரத்தின கற்களின் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க தேசிய ரத்தினக் கற்கள்
மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு அவை அனுப்பப்பட்டுள்ளன.