கம்பஹா (Gampaha) மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (9) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம்
அதன்படி, ரன்பொகுனுகம, பட்டாலிய, அத்தனகல்ல, பஸ்யால மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

நிட்டம்புவயிலிருந்து மினுவங்கொடை வரையிலான நீர் விநியோகக் குழாயில் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் பணிகள் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

