பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிக்க முயன்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நபரொருவர் கைது
மஹரகம பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் அப்பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதன் பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர்களில் ஒருவராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபரொருவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நபரை விடுவிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்.
மோசடியாக பயன்படுத்தப்பட்ட பெயர்
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பெயரை மோசடியாகப் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.
அதனையடுத்து குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.