70க்கும் மேற்பட்ட நீதிபதிகள் குறித்து நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த முறைப்பாடுகள் அனைத்திலும் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகவும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நீதித்துறை சேவையில் எதிர்காலத்தில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பு அறிவுறுத்தல்
நீதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் உட்பட அவர்களின் தொழில்முறை கண்ணியத்தைப் பேணுவதிலும் ஆணைக்குழு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதுடன், இது தொடர்பாக சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 10 நாட்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட 6 நீதிபதிகளின் பணிகளை இடைநிறுத்தவும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

