அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீந்தச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வியட்நாமை சேர்ந்த குறித்த பெண் 48 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலையில் அடித்து சென்று..
அந்த பெண் ஒரு குழுவினருடன் மொரகல்ல கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது உடல் தற்போது பெந்தர கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

