திருகோணமலையில் (Trincomalee) கோவில் திருவிழாவில் இனம் தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் திருகோணமலை பள்ளத்தோட்டம் பாலமுருகன் பூங்காவனத்திருவிழாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஒன்பதாம் திகதி திருவிழா இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதையடுத்து, இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இனந்தெரியாத கும்பலொன்று உள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் ஆலய உபகரணங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் திருகோணமலை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

