முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் தொடரும் பதற்றம்! காற்றாலை மின் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு

மன்னாரில் (Mannar) காற்றாலை மின் திட்டத்திற்கான கோபுரங்கள் அமைப்பதற்கு பொருட்கள் ஏற்றி வரப்பட்டமையினால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில், மன்னார் பஜார் பகுதியில் நேற்று (11) இரவு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட
காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய
பொருட்கள் ஏற்றி வரப்பட்டு கொண்டிருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் பதட்ட
நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறை பாதுகாப்பு

இதையத்து, குறித்த வாகனம் மன்னார் நீதி மன்ற பிரதான வீதியில் காவல்துறை
பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் தொடரும் பதற்றம்! காற்றாலை மின் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு | Wind Power Project In Sri Lanka Controversy

மக்கள் பொது அமைப்பினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்
அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளுராட்சி
மன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளடங்களாக பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

மன்னார் காவல்துயைினர்

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் காவல்துயைினர், குறித்த வாகனத்தை மன்னார்
நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்த போதும் மக்களின் பலத்த எதிர்ப்பினால் இந்த
வாகனம் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மன்னாரில் தொடரும் பதற்றம்! காற்றாலை மின் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு | Wind Power Project In Sri Lanka Controversy

தொடர்ந்தும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த காற்றாலைக்கான உதிரி பாகங்களை ஏற்றிவந்த பாரிய வாகனம்
சுமார் 50 இற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் மன்னார் நீதிமன்ற பிரதான
வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இரண்டு வீதிகளுக்கும்
அருகாமையில் அமைதியாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்