முல்லைத்தீவு- வள்ளுவர்புரம் பகுதியில் உள்ள விசுவமடு விவசாயிகள் பலநோக்கு
கூட்டுறவுச் சங்கத்தின் நவீன அரிசி ஆலையை வர்த்தகம் வாணிபம் மற்றும்
உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க பார்வையிட்டார்.
அமைச்சருடன்
கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்
உள்ளிட்டோர் அரிசி ஆலையை பார்வையிட்டனர்.
அரிசி ஆலையின் தேவைகள்
குறித்த அரிசி ஆலையின் தேவைகள் தொடர்பாக அமைச்சர்
கேட்டறிந்து கொண்டார்.
முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள்
மாவட்டத்தின் கூட்டுறவுத்துறை எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான மனுவையும் கையளித்திருந்தனர்.