கடந்த ஏழு மாதகாலப் பகுதிக்குள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் 80 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸாரின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் காரணமாக இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
44 பேர் பலி
அதே போன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்கள் காரணமாக 47 பேர் வரையானோர் காயமடைந்து சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இன்னும் சிலர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அதே போன்று குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

