சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் திருமணத்திற்கு பின் சந்திக்கும் குடும்ப பிரச்சனையை பற்றி பேசுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்த தொடரில் இப்போது பரபரப்பான கதைக்களம் செல்கிறது. ரோஹினி எப்போது உண்மை சொல்வார் என மீனா காத்திருக்க இப்போது க்ரிஷ் வீட்டிற்கும் வந்துள்ளார்.
அவனை வீட்டைவிட்டு துரத்த மனோஜ்-விஜயா நிறைய பிளான் போடுகிறார்கள், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

தற்கொலை
சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்க சீரியலில் நடித்தவர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது கதையில் அருணிற்கு அம்மாவாக சீதாவிற்கு மாமியாராக நடித்துவந்த நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்த தொடருக்கு முன் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கணவர் சுதீசுடன் ஏற்பட்ட சண்டையால் ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.


