அநுராதபுரம் (Anuradhapura) பிரதேச மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளம் தம்பதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பை அண்மித்த மீகொட பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான ஐஸ், ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப் பொருள்
அநுராதபுரத்திலுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துக் குறித்த போதைப்பொருட்களை விநியோகம் செய்ய சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதியினரை ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.